டாடா நிறுவனம் 'டாடா டைம்ரோ' என்ற பெயரை பதிவு செய்துள்ளது. இந்த பெயரை அடுத்து வரவுள்ள மைக்ரோ எஸ்யூவி காருக்கு சூட்டப்படலாம் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் தரப்பில் வெளியான தரவுகளின்படி, டாடா நிறுவனம் கடந்தாண்டு இந்த பெயரை தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போது அதற்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
டாடா நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு விதமான மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று ஹெரியர் வெர்ஷனின் 7 சீட் கொண்டட மாடல். மற்றொன்று HBX கான்செப்ட் கார் ஆகும். இவற்றில் HBX ஆனது ஏற்கெனவே 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில், இந்த இரண்டு கார்களில் ஒன்றுக்கு தான் டைம்ரோ என்ற பெயர் சூட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கண்ட மைக்ரோ எஸ்யூவி கார்கள் இந்தாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திட்டமிடப்பட்ட காலவரையறைகள் தள்ளிபோயுள்ளன.
0 Comments