பார்தி ஏ.எக்ஸ்.ஏ., ஜெனரல் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு நிறுவனத்துடன் இணைவதற்கு, அனுமதியை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வழங்கி உள்ளது.

இந்த இணைப்புகளுக்கான அனுமதியை, பெறுவதற்கான பணியை, ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., முதற்கட்டமாக கொள்கைரீதியிலான அனுமதியை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. காப்பீட்டு உலகில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த மாபெரும் இணைப்பு நடவடிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப் பட்டது.
பார்தி ஏ.எக்ஸ்.ஏ., நிறுவனத்தில், பார்தி எண்டர்பிரைசசுக்கு 51 சதவீத பங்குகளும்; பிரான்சை சேர்ந்த ஏ.எக்ஸ்.ஏ., நிறுவனத்துக்கு, 49 சதவீத பங்குகளும் உள்ளன.
0 Comments