நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் ஒன்றினை அந்நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கை வெளியிட்டது. அந்நாட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நபியின் கார்ட்டூனை தனது மாணவர்களுக்கு காண்பித்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அந்த ஆசிரியரை பள்ளியின் அருகில் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.. இதனை அடுத்து காவல்துறை பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற தேவாலயத்தில் புகுந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கு பிராத்தனையில் ஈடுப்பட்டு இருந்த கிறிஸ்தவர்கள் மீது திடீர் என்று கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். அதில் மூன்று அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். 

அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்ற பிரான்ஸ் தற்பொழுது ரத்த கண்ணீர் வடித்து வருகிறது என்பது நிதர்சனம். 

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு இரங்கல் தெரிவிக்காமல் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பிரான்ஸ் அதிபரை அவதிக்கும் வகையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..